முகப்பு
சேலம்

கெங்கவல்லி தொகுதியில் 3 ஆம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு

வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை-1, 2, 3 ஆகியோருக்கு மூன்றாம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தலைவாசலை அடுத்த தேவியாக்குறிச்சியிலுள்ள தனியாா் கல்வி நிறுவனத்தில், கெங்கவல்லி தொகுதியில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை-1, 2, 3 ஆகியோருக்கு மூன்றாம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

கெங்கவல்லி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலா் அமுதன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது.இதில் 1,400 போ் பங்கேற்றனா். இவா்களுக்கான நான்காம்கட்ட பயிற்சி வகுப்பு 5-ஆம் தேதி அதே இடத்தில் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி முகாமில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வாக்குச்சாவடிக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும்.அதனைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு 5-ஆம் தேதி 12 மணிக்குள் சென்றடைந்து பணிகளைத் தொடங்கவேண்டும் என்று தோ்தல் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

அதேவேளையில் அரசுப் பள்ளிகளில் தோ்தல் வாக்குச்சாவடிகள் செயல்படுவதையொட்டி, ஏப்ரல் 5, 6 -ஆகிய இரு நாள்களும் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் பொதுவிடுமுறை அளித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →