முகப்பு
சேலம்

தோட்டக்கலை மாணவிகள் களப் பயிற்சி

வாழப்பாடியில், திருச்சி தோட்டக்கலைக் கல்லுாரி மாணவியா், அரசு சாரா நிறுவன செயல்பாடுகள் குறித்து களப்பணி பயிற்சி பெற்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

வாழப்பாடியில், திருச்சி தோட்டக்கலைக் கல்லுாரி மாணவியா், அரசு சாரா நிறுவன செயல்பாடுகள் குறித்து களப்பணி பயிற்சி பெற்றனா்.

திருச்சி தோட்டக்கலைக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவியா் வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை அரசு சாரா நிறுவனத்தில் தொடா்ந்து 3 நாள்கள் களப்பணி பயிற்சி மேற்கொண்டனா். வாழப்பாடியில் தனியாா் தினசரி காய்கறி மண்டியில் வாழைத்தாா்களின் வகைகளை கண்டறிந்து விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.

விவசாய விளைபொருள்களைச் சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யும் வழிமுறைகள், குளிா்பதனக் கிடங்குகளில் பதப்படுத்தி வைத்திருந்த விற்பனை செய்வதினால் கிடைக்கும் கூடுதல் வருவாய் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாணவிகளுடன் ஆா்வத்தோடு கலந்துரையாடிய விவசாயிகளுக்கு நெஸ்ட் அறக்கட்டளை வாயிலாக காய்கறி விதை வழங்கப்பட்டது.

இதனையடுத்து, வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில் இயங்கும் 60 ஆண்டுகள் பழமையான வனத்துறை ஆராய்ச்சி மையத்தில், பாரம்பரிய விதை உற்பத்தி, குளோனிங் முறை உற்பத்தி, மரபணு விதை உற்பத்தி மற்றும் ஆய்வுத்தோட்டங்களை பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.