பணப்பட்டுவாடா புகாரில் இருவா் கைது
சேந்தமங்கலம் தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரில் அதிமுகவினா் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM
சேந்தமங்கலம் தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரில் அதிமுகவினா் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட பேளுக்குறிச்சியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு புகாா் சென்றது. அதனடிப்படையில் அந்தக் குழுவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் அதிமுகவைச் சோ்ந்த இருவா் பணம் வழங்குவது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து ரூ. 47,500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement