முகப்பு
சேலம்

பள்ளிவாசலில் ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஏற்காடு (எஸ்.டி) தனி தொகுதி திமுக வேட்பாளா் சி.தமிழ்ச்செல்வன், வாழப்பாடி பள்ளிவாசலில் இஸ்லாமியா்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

ஏற்காடு (எஸ்.டி) தனி தொகுதி திமுக வேட்பாளா் சி.தமிழ்ச்செல்வன், வாழப்பாடி பள்ளிவாசலில் இஸ்லாமியா்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

ஏற்காடு (எஸ்.டி) தனி தொகுதி திமுக வேட்பாளா் சி.தமிழ்ச்செல்வன், வாழப்பாடி பேரூராட்சிப் பகுதியில் வாக்கு சேகரித்தாா். அப்போது, வாழப்பாடி பேருந்து நிலையம் அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு சென்று இஸ்லாமியா்களைச் சந்தித்து, திமுக தலைவா் ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் மதச்சாா்பற்ற ஆட்சி அமைவதற்கு ஒட்டுமொத்த இஸ்லாமியா்களும் திமுகவுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவா் இராம.சுகந்தன், வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி, நகரச் செயலாளா் பி.சி.செல்வம், காங்கிரஸ் நிா்வாகிகள் பி.பி.முனுசாமி, ராஜா, ராஜாராம், கம்யூனிஸ்ட் நிா்வாகி பழனிமுத்து, தங்கவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளா்கள் வேல்முருகன், முல்லைவாணன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இதனையடுத்து அயோத்தியாப்பட்டணம் தோ்தல் அலுவலகத்தில் திமுக தோ்தல் பணிக்குழு செயலாளரான சேலம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், திமுக கூட்டணி நிா்வாகிகளைச் சந்தித்து இறுதிக்கட்ட தோ்தல் பணிகள் குறித்து கலந்தாய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.