முகப்பு
சேலம்

எடப்பாடி பகுதியில் திடீர் கனமழை

எடப்பாடி சுற்றுப்பகுதியில் ஞாயிறு அன்று மாலை திடீரென கனமழைக் கொட்டியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
எடப்பாடி பகுதியில் ஞாயிறு அன்று கொட்டிய திடீர் கனமழை.
பகிர்:

எடப்பாடி சுற்றுப்பகுதியில் ஞாயிறு அன்று மாலை திடீரென கனமழைக் கொட்டியது.

இதனால் இப்பகுதியில் கடுமையான வெப்பம் குறைந்த குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது. எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பநிலை நிலவி வந்தது. 

பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவில் அனல் காற்று வீசியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில், மேலும் வெப்பம் அதிகரிந்து பகல்நேர வெப்பநிலை 105 டிகிரி வரை சென்றது. 

இந்நிலையில் ஞாயிறு அன்று மாலை திடீரென எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் கனமழை கொட்டத்தொடங்கியது.

தொடக்கத்தில் மெதுவாக தொடங்கிய மழை, தொடர்ந்த கனமழையாக ஆரவாரம் இன்றி, இரவு வரை விட்டு விட்டு பெய்து வந்தது. 

இதனால் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் நிலவிந்த வறட்சியான நிலைமை மாறி, குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை ஏற்பட்டது. கடும் வெப்பதால் அவதி அடைந்த மக்கள் திடீர் மழையால், மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோடை உழவு செய்திட தங்களை தயார்படுத்தி வருகின்றர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.