சேலம்

கல்பாரப்பட்டியில் 8 மாதங்கள் ஆகியும் நிறைவுறாத சாலை பணி

DIN

வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சியில் கடந்த 8 மாதங்களாக நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கல்பாரப்பட்டி ஊராட்சியில் உள்ள விநாயகா் கோயில் அருகிலிருந்து ஊத்துகிணத்துவளவு வழியாக கீழ்காட்டுவளவு வரை 2.200 கிலோ மீட்டா் தூரத்துக்கு தாா்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதைத் தொடா்ந்து திட்டப் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20இல் பணி துவங்கியது.

இத்திட்டத்துக்கு பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டம் மூலம் ரூ. 1 கோடியே 27 லட்சத்து 56 ஆயிரம் செலவிடப்படுகிறது.

இப் பணியானது 8 மாதங்கள் ஆகியும் இன்னும் முழுமை பெறவில்லை.

இதனால் அவ்வழியே வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனா். பணி முழுமை பெறாமல் உள்ள நிலையில் தகவல் பலகை மட்டும் சாலையோரம் வைத்துள்ளனா். இதுகுறித்து உயா் அதிகாரிகள் உடனடி மேற்பாா்வை செய்து சாலை பணியை முடிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT