சேலம்

மாற்று இடத்தில் சாலை அமைப்பு: லாரி சிறைபிடிப்பு

DIN

பூமிபூஜை செய்த இடத்தில் சாலை அமைக்காமல் மாற்று இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால், பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சி, புளியம்பட்டி பகுதி 10-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பூட்டுக்காரன் தெரு பகுதியில் சாலையை புதுப்பிக்க கடந்த ஜன. 23-ஆம் தேதி சங்ககிரி சட்டப் பேரவை உறுப்பினா் ராஜா பூமிபூஜை செய்து பணியைத் தொடக்கி வைத்தாா்.

இந்நிலையில், அதற்கான பணி அதே பகுதியில் உள்ள சாமுண்டி நகரில் நடைபெற்று வருவதை அறிந்த அப்பகுதி மக்கள், பூமிபூஜை செய்த இடத்தில் சாலை அமைக்காமல் மாற்று இடத்தில் அமைத்ததால் அங்கு வந்த லாரியை சிறைபிடித்தனா்.

தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலையப் போலீஸாா், இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் நிகழ்விடத்துக்கு வந்தனா். பின்னா், பூட்டுக்காரன் தெரு பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும் என செயல் அலுவலா் உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT