சேலம்

தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேரூராட்சி அலுவலகங்களில் பல்வேறு பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் சங்ககிரியில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றாா். பின்னா் தேவூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்ற அவா் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி விவரங்களை செவிலியா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினாா். பின்னா், தேவூா் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி பேரூராட்சியின் சாா்பில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT