சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள்
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில், தேய்பிறை பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாலை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில், தேய்பிறை பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாலை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் உள்ள சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு தேய்பிறை பிரதோஷத்தையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர். அதே போல் சங்ககிரிஅருகே உள்ள அன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர், நந்தி பகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.