முகப்பு
சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளிலிருந்து  திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.

Updated On : 10 ஆகஸ்ட், 2021 at 8:33 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:23 AM

கர்நாடக அணைகளிலிருந்து  திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரளமாநிலத்தில் கபினியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கபினி நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரு நாள்களாக கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட நீர் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு  3,046கனஅடி வீதம் வந்துகொண்டிந்த  நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 7,491 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 74.99அடியிலிருந்து 74.30 அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 36.51 டி.எம்.சியாக இருந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.