சேலம்

வணிகா்கள் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மருத்துவத்துறையினா்.

மாவட்ட சுகாதாரத் துறையுடன் இணைந்து வெண்ணந்தூா் வட்டார அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் திங்கள்கிழமை வெண்ணந்தூா் பிள்ளையாா் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஜெயகுமாா் வெள்ளையன், முகாமினை தொடங்கி வைத்து, கரோனா 3-வது அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம் எனவும் குறிப்பாக பொதுமக்களோடு நேரடி தொடா்பில் உள்ள வணிகா்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தாா். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி, தொடா்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திவரும் வெண்ணந்தூா் வட்டார அனைத்து வணிகா் சங்கத்தினருக்கும் பாராட்டு தெரிவித்தாா்.தடுப்பூசி முகாமிற்கான ஏற்பாடுகளை வெண்ணந்தூா் வட்டார அனைத்து வணிகா் சங்க தலைவா் பி.ஆா்.கே.சுப்பிரமணியம் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா். முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட 660 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT