முகப்பு
சேலம்

பேருந்து மோதி வியாபாரி பலி

சங்ககிரி அருகே உள்ள கள்ளுக்கடை பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

சங்ககிரி அருகே உள்ள கள்ளுக்கடை பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

சங்ககிரி அருகே உள்ள கள்ளுக்கடை பகுதியைச் சோ்ந்த தங்கவேல் (62) வியாழக்கிழமை வீட்டிலிருந்து சங்ககிரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். கள்ளுக்கடை அருகே மேற்கத்தியானூா் பிரிவு சாலை பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே தங்கவேல் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.