குட்கா கடத்தல்: தம்மம்பட்டியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்
தம்மம்பட்டியில், ரூ.50 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்காவை பதுக்கிய வழக்கில் கைதான பா.ஜ.க. பிரமுகர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
தம்மம்பட்டியில், ரூ.50 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்காவை பதுக்கிய வழக்கில் கைதான பா.ஜ.க. பிரமுகர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
சேலம் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில், எஸ்.ஐ. ராஜ்மோகன் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார், கடந்த ஜூலை 23 ஆம் தேதி இரவு, தம்மம்பட்டி நடுவீதியில், பாஜக நகர வர்த்தக அணி செயலாளரான பிரகாஷ் என்பவருடைய கடை மற்றும் குடோன்களில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது, உடையார்பாளையம் இடுகாடு செல்லும் வழியில் தொடக்கப்பள்ளி எதிரே உள்ள நாயக்கர் தோட்டத்தில், பிரகாஷ் பதுக்கி வைத்திருந்த, 50 லட்ச ரூபாய் மதிப்பிலான, ஒன்றரை டன் எடையுள்ள குட்கா, பான்பராக் பாக்கெட்களை, தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. பிரமுகர் பிரகாஷ் தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ள நிலையில், அவர் மீது குண்டாஸ் வழக்கு பதியக்கோரி, ஆட்சியர் கார்மேகத்திற்கு, சேலம் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தார்.
அதனையடுத்து, தம்மம்பட்டி பா.ஜ.க. பிரமுகர் பிரகாஷ் மீது, குண்டாஸ் வழக்குப் பதிய ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.