சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம் - விருத்தாசலம் வழித்தடத்தில் மின்பாதை அமைப்பதற்கு வைக்கப்பட்டிருந்த செம்பு வடம் திருடுபோனது குறித்து, சேலம் மத்திய ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம்-விருத்தாசலம் ரயில்பாதை மின்மயமாக்கும் பணிகள் இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம் ஆத்துாா், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் ரயில் பாதையையொட்டி மின் கம்பங்கள் அமைத்து, செம்பு வடங்கள் பொருத்தும் பணியில், பணியாளா்கள் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், வாழப்பாடியை அடுத்த ஏத்தாப்பூா் ரயில் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த செம்பு வடத்தின் ஒரு பகுதியை இரு தினங்களுக்கு முன் மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சேலம் மத்திய ரயில்வே போலீஸாா், செம்பு வடத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.