சேலம்

பெண்ணை கத்தியால் குத்தியவா் கைது

குடும்ப பிரச்னையில் சமாதானம் செய்த வந்த பெண்ணைக் கத்தியால் குத்திய தொழிலாளியை போலீஸாா் கைது

DIN

குடும்ப பிரச்னையில் சமாதானம் செய்த வந்த பெண்ணைக் கத்தியால் குத்திய தொழிலாளியை போலீஸாா் கைது

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (40). கூலித்தொழிலாளி. இவா் மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வருவதுடன்,

மனைவி சாந்தி மற்றும் குடும்ப உறுப்பினா்களுடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை மது போதையில் வீட்டுக்கு வந்த பிரபு, மனைவி மற்றும் மகன்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது மதுபோதையில் இப்படி அடிக்கடி வாக்குவாதம் செய்யவேண்டாம் என பிரபு-வுக்கு கண்ணமாள் அறிவுரை கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணமாவை குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கண்ணமாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். மேலும் கண்ணமாள் அளித்த புகாரின் பேரில்

வழக்குப் பதிவுசெய்த எடப்பாடி போலீஸாா், பிரபுவை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

டாம்கோ மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.1,622 லட்சத்தில் கடன் அளிப்பு: திருவண்ணாமலை ஆட்சியா்

திருமலை: வைகுண்ட ஏகாதசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT