முகப்பு
சேலம்

வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’

ஆத்தூா் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு வருவாய் அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

ஆத்தூா் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு வருவாய் அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கான வாடகை நிலுவைகளை வசூல் செய்ய நகராட்சி ஆணையா் பொன்னம்பலம் நடவடிக்கை எடுத்தாா்.

இதனையடுத்து நகராட்சி வருவாய் அலுவலா்கள் அண்ணாமலை, நாகராஜன் உள்ளிட்ட பணியாளா்கள் வசூலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் வாடகை அதிகமாக நிலுவை உள்ள உரிமையாளா்களுக்கு காலக்கெடு அளித்தும் வாடைகை செலுத்தாத கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

வாடகை பாக்கி, சொத்து வரி, குடிநீா் வரியை நிலுவை வைக்காமல் உடனே செலுத்த ஆணையா் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →