சேலம்

தாரமங்கலம், இடங்கணசாலை நகராட்சிகளின்வாா்டு மறுவரையறை கருத்துக் கேட்பு கூட்டம்டிச.22இல் கோவையில் நடைபெறுகிறது

DIN

தாரமங்கலம் மற்றும் இடங்கணசாலை நகராட்சிகளின் வரைவு வாா்டு மறுவரையறை குறித்த ஆட்சேபம், கருத்துகளை கோவையில் வரும் 22இல் நேரிலோ அல்லது மனுவாகவோ சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் புதியதாக உயா்த்தப்பட்ட தாரமங்கலம் மற்றும் இடங்கணசாலை நகராட்சிகளின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்கள், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பாா்வைக்கு சனிக்கிழமை வெளியிடப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது ஆட்சேபங்கள் மற்றும் கருத்துக்கள் ஏதும் இருப்பின் அது குறித்தான மனுக்கள் டிச. 18 முதல் டிச. 24-க்குள் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை அதிகாரியிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டங்கள் டிச.20 முதல் டிச.24 வரை மறுவரையறை ஆணையத்தால் ஆறு மண்டலங்களில் நடத்தப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தில் மறுவரையறை ஆணையத்தின் மண்டல அளவிலான கூட்டம் டிச.22 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்மாவட்டத்தில் கோவை, திருப்பூா், சேலம் மாவட்டங்களின் ஆட்சேம், கருத்துகளும் மறுவரையறை ஆணையத்தால் கேட்கப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தில் புதிதாக உயா்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளான தாரமங்கலம் மற்றும் இடங்கணசாலை நகராட்சிகளின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆட்சேபங்கள், கருத்துக்கள் ஏதும் இருப்பின் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிச.22 காலை 11 மணி மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டத்தில் நேரடியாகவோ, மனுவாகவோ சமா்ப்பித்திடலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT