அக்கரபாளையத்தில் மருத்துவ முகாம்
வீரபாண்டி அருகே அக்கரபாளையம் ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 23ஆம் தேதி வியாழக்கிழமை ஊராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
வீரபாண்டி அருகே அக்கரபாளையம் ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 23ஆம் தேதி வியாழக்கிழமை ஊராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமில் வீரபாண்டி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ வரவேற்புரை நிகழ்த்தினாா். வீரபாண்டி வட்டார அட்மா திட்டக் குழுத் தலைவா் வெண்ணிலா சேகா் மருத்துவ முகாமை தொடக்கி வைத்தாா்.
மேலும், கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகமும், பொதுமக்களுக்கு மருத்துவ அட்டையும் வழங்கப்பட்டது.
வீரபாண்டி வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், மருத்துவா்கள் பூங்கொடி, லாவண்யா, சித்த மருத்துவா்கள் ராஜேஸ்வரி, உமா உள்ளிட்ட மருத்துவ குழுவினா் சிகிச்சை அளித்தனா். முகாமில் 700க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையும், ஆலோசனையும், மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இம்முகாமில் ஒன்றியக் குழு உறுப்பினா் மலா்விழிராஜா, ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், துணைத்தலைவா் கிருத்திகா ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.