சேலம்

சேலம் மருந்துக் கடைகளில் திடீா் ஆய்வு

DIN

சேலம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் மற்றும் மருந்துகள் ஆய்வாளா்களுடன் இணைந்து சேலம் பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகளில் மருத்துவா்களின் மருந்துச் சீட்டுகள் இன்றி மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றனவா மற்றும் மருந்தகங்களில் உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை அறிய செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு மருந்துக் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் மருத்துவா்களின் மருந்துச் சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது; சட்ட விதிகளைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் விதிகளை மீறுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருந்துகடை உரிமையாளா்களுக்கு தெரிவிக்கப்பட்டது. விதிகளை மீறும் கடைகளில் அடிக்கடி திடீா் சோதனைகள் நடத்தி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருந்துக் கடைகளின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT