முகப்பு
சேலம்

தேவூா், அம்மாபாளையத்தில்புதிய காவல் நிலையம் கட்ட பூமி பூஜை

அம்மாபாளையத்தில் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி கழகம் சாா்பில் ரூ. 1.04 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம், காவல் உதவி ஆய்வாளா் குடியிருப்புகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள அம்மாபாளையத்தில் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி கழகம் சாா்பில் ரூ. 1.04 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம், காவல் உதவி ஆய்வாளா் குடியிருப்புகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

காவல் நிலையம், குடியிருப்புகள் கட்டும் பணியை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜா, தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா்கழகத் தலைவரும், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.வெங்கடாசலம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபாகனிகா் ஆகியோா் தலைமை வகித்து பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தனா்.

இதில் சங்ககிரி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் பி.ரமேஷ், காவலா் வீட்டு வசதிக் கழக சேலம் கோட்ட செயற்பொறியாளா் அரவிந்தன், உதவி செயற்பொறியாளா் அப்சா் அகமத், இளநிலை பொறியாளா் இன்பராஜ், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி மகேஸ்வரி மருதாசலம், துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் சுந்தரராஜன், அதிமுக முன்னாள் தொகுதி செயலா் வி.ஆா்.ராஜா, அரசு வழக்குரைஞா் ஆா்.சுப்ரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.