ஃபிக்கி மகளிர் அமைப்பின் தலைவராக டாக்டர் அமுல்யா ராவ் தேர்வு!
இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளன மகளிர் அமைப்பின் தலைவர் தேர்வானது பற்றி...
2026-27 ஆம் ஆண்டுக்கான இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளன மகளிர் அமைப்பின் (FICCI FLO) தலைவராக டாக்டர் அமுல்யா ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இந்த அமைப்பின் மூத்த துணைத் தலைவராக உள்ளார்.
டாக்டர் அமுல்யா ராவ் - மருத்துவர், கல்வி ஆலோசகர், தொழிலபதிபர், சமூகத் தலைவர், தொழில் துறை வல்லுநர் என பன்முகங்களைக் கொண்டவர்.
குண்டூர் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பில் தங்கம் வென்ற இவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் பணியைத் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டு வரை அப்போலோ மருத்துவமனைகளில் பணியாற்றினார்.
Advertisement
Advertisement
பின்னர் கல்லூரி ஆலோசகராக பணிபுரிந்து, தற்போது மாணவர்களுக்குக் கல்வி மற்றும் தொழில்ரீதியாக வழிகாட்டியாக இருந்து வருகிறார்.
மேலும், மாநில அளவிலான பிரிட்ஜ் வீராங்கனை, நீச்சல் வீராங்கனை, பாரம்பரிய நடனக் கலைஞர் என பல திறன்களைக் கொண்டவர்.
பாரம்பரிய ஜவுளி கைவினைத் திறனை ஊக்குவிக்கும்விதமாக 2021ல் 'மகாம்' (Maggam) என்ற நிறுவனத்தைத் தொடங்கியதுடன் தனது குடும்ப வணிகக் குழுமத்தில் இயக்குநராகவும் இருக்கிறார்.
சர்வதேச மகளிர் சங்கம், இளம் தலைவர்கள் அமைப்பு (YPO) - சென்னை கிளையில் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளன மகளிர் அமைப்பின் தீவிர உறுப்பினராகவும் பல்வேறு முக்கியப் பதவிகளில் இருந்து, இப்போது மூத்த துணைத் தலைவராக உள்ளார்.
தொடர்ந்து இந்த அமைப்பின் தலைவராக (2026-27) பொறுப்பேற்கவுள்ளார்.
Dr Amulya Rao has been named FICCI FLO Chairperson 2026-27
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.