FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: தஜிகிஸ்தான் செல்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

தஜிகிஸ்தானில் நாளை தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சிலின் 25 ஆவது கூட்டம் குறித்து...

18 அக்டோபர் 2026, 5:21 pm IST
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பகிர்:

தஜிகிஸ்தானில் நாளை தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சிலின் 25 ஆவது கூட்டத்தில், இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்டோபர் 19, 20 தேதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அரசுத் தலைவர்கள் கவுன்சிவின் 25-வது கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார். இதற்காக அவர் தஜிகிஸ்தானின் துஷான்பே நகருக்குச் செல்லவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே, வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு, போக்குவரத்து இணைப்பு, புத்தாக்கம், கலாசார பரிமாற்றங்கள் ஆகியவற்றில் பலதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.

Advertisement

Advertisement

மேலும், ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவதுடன், அமைப்பின் நிதி மற்றும் அமைப்பு சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பல்வேறு செயல்முறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், புத்தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் போன்றவற்றில் பிராந்திய ஒத்துழைப்பிற்குத் தொடர்ந்து பங்களித்து வருகிறது.

இந்த அமைப்புக்குள் நடைமுறைக்கு உகந்த, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து, மற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இக்கூட்டம் இந்தியாவிற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

இதற்கு முன்னதாக, 2025 நவம்பர் 18 இல் ரஷியாவின் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tajikistan to represent India at the 25th Meeting of the Council of Heads of Government (CHG) of the Shanghai Cooperation Organisation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments