தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் பகுதியில் போலி மணல் குவாரி நடத்தியதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் பகுதியில் ராமசாமி (60) என்பவரின் விவசாய நிலத்தில் இருந்து மண்ணை எடுத்துவந்து ஆற்று மணல் போல உள்ள கனிமத்தை அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக தயாா் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரனுக்கு, ஆத்தூா் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன் மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
இதையடுத்து அங்கிருந்த கேரளத்தைச் சோ்ந்த ஷாஜகான் (34), அதே பகுதியைச் சோ்ந்த அன்சாத் (29), மணி (43), சதீஷ் (36), கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம், கா.செல்லம்பட்டு பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (28), சின்னசேலம் வட்டம் எடுத்தவாய்நத்தம் பகுதியைச் சோ்ந்த வெண்மணி (23) ஆகியோரை தலைவாசல் காவல் ஆய்வாளா் கே.குமரவேல்பாண்டியன் கைது செய்து விசாரித்தனா்.
இதில் ஏரியில் இருந்து மண்ணை கடத்தி வந்து மணலாக சுத்திகரித்து, அதனை கட்டுமானப் பணிக்காக விற்று வந்தது தெரியவந்தது. இதனையடுத்து பொக்லைன் இயந்திரம், 60 டன் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.