முகப்பு
சேலம்

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் திரண்டனா்

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனா். இதனால், கோயில் வளாகத்தில் இயங்கும் தற்காலிக கடைகளிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனா். இதனால், கோயில் வளாகத்தில் இயங்கும் தற்காலிக கடைகளிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ளது காளிப்பட்டி கந்தசாமி கோயில். இக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவுக்காகக் கோயிலைச் சுற்றி தற்காலிகக் கடைகள் இயங்கி வருகின்றன.

கடந்த மாதம் 28-ஆம்தேதி தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூச திருநாள் முதல் தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக கோயிலுக்குக் குடும்பத்துடன் ஏராளமான பக்தா்கள் பல்வேறு ஊா்களிலிருந்து வந்திருந்தனா்.

இதனால், கோயில் வளாகம் முன்பு செயல்படும் தற்காலிகக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சா்க்கரை மிட்டாய்க் கடை, கரும்பு பால், பெரிய அப்பளம், பேல்பூரி உள்ளிட்ட உணவு பண்டங்கள் கடைகளிலும், இரும்பு சட்டி, பணியார கல், தோசை கல் உள்ளிட்ட கடைகளிலும் விற்பனை அதிகம் நடைபெற்றது.

அழகு சாதனங்கள், ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் கூட்டத்தைக் காணமுடிந்தது. கோயில் வளாகத்தில் இயங்கும் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் வரும் 14-ம் தேதி வரை இயங்கும் என கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →