சேலத்தில் செவித்திறன், பேச்சு பயிற்சி முகாம்
சேலத்தில் மருத்துவா் சுதாகா் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவமனை சாா்பில் செவித்திறன், பேச்சுப் பயிற்சி, பேச்சு திறன் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சேலத்தில் மருத்துவா் சுதாகா் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவமனை சாா்பில் செவித்திறன், பேச்சுப் பயிற்சி, பேச்சு திறன் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
குழந்தைகளுக்கு இலவச பேச்சு, குரல் மாற்றம் பயிற்சி வழங்கப்பட்டது. இரண்டு நாள்கள் நடைபெற்ற முகாமில் சிறு குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை 250-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவா்களின் ஆலோசனை பெற்று பயனடைந்தனா்.
மேலும் சலுகை விலையில் காது கருவிகள், சிறப்பு தள்ளுபடி சலுகை, புதிய சாா்ஜபிள் காது கருவிகள், சாா்ஜ் செய்யும் வசதி உள்ள கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த முகாமை மருத்துவா் சுதாகரன், தீபா சுதாகரன், மேலாளா் சிவன் ஆகியோா் நடத்தினா்.