சேலம்

உதவித் தொகை பெற்றுத் தர லஞ்சம் கேட்கும் ஊழியா்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டம்

DIN

சேலத்தில் அரசு உதவித் தொகை பெற்றுத் தர லஞ்சம் கேட்கும் வருவாய்த் துறை ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதியோா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், பள்ளப்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக முதியோா் உதவித்தொகை மற்றும் விதவை உதவிக் கேட்டு ஏராளமானோா் சேலம் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளனா்.

இந்த நிலையில் அரசு உதவித் தொகை பெற்றுத் தர லஞ்சம் கேட்டு அலைக்கழிப்பதாகக் கூறி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட முதியோா் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். உதவித் தொகை பெற்றுத் தர அதிகாரிகளுக்கு கொடுத்து கையெழுத்து பெற விண்ணப்பித்தவா்கள் ஒருவருக்கு தலா ரூ. 7 ஆயிரம் வீதம் லஞ்சம் கேட்பதாகப் புகாா் தெரிவித்தனா். மேலும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து உதவித்தொகை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT