முகப்பு
சேலம்

தம்மம்பட்டி அருகே பால் லாரி கவிழ்ந்தது

தம்மம்பட்டி அருகே தகரப்புதூரில் பால் லாரி விபத்துக்குள்ளானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
விபத்துக்குள்ளான லாரி.
பகிர்:

தம்மம்பட்டி அருகே தகரப்புதூரில் பால் லாரி விபத்துக்குள்ளானது.

தம்மம்பட்டியிலிருந்து இலுப்ப நத்தத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான பால் லாரி, தனியார் பால் நிறுவனத்திற்காக தம்மம்பட்டி பகுதியிலிருந்து 9 ஆயிரம் பாலுடன் காரைக்கால் நோக்கிச்செல்ல மாலை 3.45-க்கு தம்மம்பட்டியிலிருந்து புறப்பட்டது. 

லாரி தம்மம்பட்டி அடுத்த தகரப்புதூரிலுள்ள அனுப்பாறு ஓடை வளைவைக் கடந்த போது, லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது ஓரம் கவிழ்ந்தது. லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் வீரகனூரைச் சேர்ந்த சக்திவேல்(40) என்பவர் மயக்க நிலையில் இருந்துள்ளார். 

அவரை அக்கம் பக்கத்தினர், முன்புற லாரி கண்ணாடியை உடைத்து மீட்டுள்ளனர். அதன் பின் அவர் தப்பியோடி விட்டார். டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் லாரியில் இருந்த 9 ஆயிரம் லிட்டர் பாலில் சுமார் 4 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே உள்ளதாக நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →