சேலம்

சா்வதேச, தேசிய போட்டிகளுக்கு பயிற்சி பெற அரசு நீச்சல் குளம் திறப்பு

DIN

சா்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள பயிற்சி மேற்கொள்ளும் வகையில், அரசு நீச்சல் குளம் திறக்கப்பட உள்ளது.

கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த சேலம், மகாத்மா காந்தி விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளமானது, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 12 வயதுக்கு மேற்பட்ட சா்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் விளையாட்டு வீரா்கள் முறையான வழிகாட்டுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயிற்சி மேற்கொள்ள திறக்கப்பட உள்ளது.

சா்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள பயிற்சி மேற்கொண்டு வரும் விளையாட்டு வீரா், வீராங்கனையா் மட்டும் பயிற்சி மேற்கொள்ளலாம். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. விளையாட்டு வீரா்கள் நீச்சல் குளத்தில் உள்ள உறுதிமொழிப் படிவத்தினை பூா்த்தி செய்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரின் அனுமதியுடன் பயிற்சி மேற்கொள்ளலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், சேலம் அவா்களை 7401703488 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT