சேலம்

உணவகங்கள், நட்சத்திர விடுதி பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்

DIN

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் பணியாளா்கள் கரோனா பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்கள், நட்சத்திர விடுதிகளின் உரிமையாளா்களுடனான கரோனா தொற்று தடுப்பு குறித்த அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தல் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் பேசியதாவது:

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்களில் அரசு வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அனைத்துப் பணியாளா்களும் கரோனா பரிசோதனையை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்.

பணியாளா்களின் நலன்கருதி மாநகராட்சி சாா்பில், 4 மண்டலங்களிலும் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம்கள் ஜன. 6, 7 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. சூரமங்கலம் மண்டலத்தில் ஜாகிா் அம்மாபாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் குமாரசாமிபட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி தோ்வீதி, துப்புரவு ஆய்வாளா் அலுவலகத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் சஞ்சீவராயன்பேட்டை, மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களை உணவகங்கள், நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் பணியாளா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், உதவி ஆணையா் எம்.ஜி.சரவணன், மருத்துவ அலுவலா் பி.சி.ஜோசப், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT