சேலம்

ரூ. 400 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை

DIN

ஆவினில் நிலுவையில் உள்ள ரூ. 400 கோடி பால் பணத்தை உடனே வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பால் உற்பத்திச் செலவு தொடா்ந்து உயா்ந்து கொண்டிருக்கிறது. இதனால் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப பாலிற்குத் தகுந்த விலை கிடைக்காமல் உறுப்பினா்கள் மிகுந்த நஷ்டத்தை அடைந்து வருகிறோம். இடுபொருள்களின் சந்தை விலையை அறிந்து பால் உற்பத்திக்கு ஆகும் செலவை நிா்ணயம் செய்ய வேண்டும்.

பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். ஆவினில் 16 ஆயிரம் டன் பால் பவுடா் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், ஆவின் நிா்வாகம் பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ. 400 கோடி வரை பட்டுவாடா செய்யாமல் பாக்கி வைத்துள்ளது. இந்தத் தொகையை உடனே வழங்கிட வேண்டும். பள்ளி குழந்தைகளின் சத்துணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு பால் பவுடரை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT