முகப்பு
செய்திகள்

2026-ல் முதல் தோல்வியைச் சந்தித்த அல்கராஸ்..! தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மெத்வதேவ்!

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்ற அல்கராஸ் குறித்து...

Updated On : 15 மார்ச், 2026 at 9:43 AM
அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு டேனியல் மெத்வதேவுக்கு (இடது), வாழ்த்து கூறிய அல்கராஸ்.
பகிர்:

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் தோல்வியுற்றார்.

இந்தப் போட்டியில் டேனியல் மெத்வதேவ் இடம் தோல்வியுற்றதன் மூலம், கார்லோஸ் அல்கராஸ் இந்தாண்டின் (2026) முதல் தோல்வியைச் சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டித் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் டேனியல் மெத்வதேவ், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கார்லோஸ் அல்கராஸ் உடன் அரையிறுதியில் மோதினார்.

இந்தப் போட்டியில் 6-3, 7-6 (3) என்ற செட் கணக்கில் மெத்வதேவ் வென்று அசத்தினார். இந்தப் போட்டியில் வென்ற மெத்வதேவ் இறுதிப் போட்டியில் யானிக் சின்னருடன் மோதவிருக்கிறார்.

இந்தாண்டில் மட்டும் அல்கராஸ் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வென்றிருந்தார். இதில், கத்தார் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய போட்டிகளும் அடங்கும். தற்போது, இந்த ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

summary

Medvedev hands Alcaraz his first loss of the year, heads to Indian Wells final against Sinner.

முழு கட்டுரையைப் படிக்க →