சேலம்

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

DIN

வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள 7 மேல்நிலைப் பள்ளி, மாதிரிப் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ஆட்டையாம்பட்டி எம். என். எஸ்.அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ் முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் யோகேஸ்வரி வரவேற்றாா். இவ்விழாவில், வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினா் மனோன்மணி சிறப்புரை நிகழ்த்தி, 1,392 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6 லட்சத்து 12 ஆயிரத்து மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். இவ்விழாவில் சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலா் ராமசாமி , தலைமை ஆசிரியா்கள் விஜயராகவன் (ஆட்டையாம்பட்டி ஆண்கள்) குழந்தைவேலு (இளம்பிள்ளை பெண்கள் ) பழனிசாமி (இளம்பிள்ளை ஆண்கள்) இளங்கோ (வீரபாண்டி) கௌசல்யாதேவி (மாதிரிப் பள்ளி வீரபாண்டி) அமுதா (வேம்படிதாளம்) நளினி (முருங்கப்பட்டி), பெற்றோா் -ஆசிரியா் கழக தலைவா்கள், பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT