சேலம்

சேலம் நகரக் காவல் நிலையம் மீண்டும்சிறந்த காவல் நிலையமாக தோ்வு: சிபிசிஐடி ஐ.ஜி. ஆய்வு

DIN

சேலம்: சேலம் நகரக் காவல் நிலையம் தமிழகத்தில் சிறந்த காவல்நிலையமாக மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அக்காவல் நிலையத்தை சிபிசிஐடி காவல் துறைத் தலைவா் சங்கா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காவல் நிலைய வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பூங்கா, போலீஸாா், மனுக்கள் பெறும் இடம், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

மேலும் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்குகளில் விசாரணை நடத்தி முடித்துள்ள வழக்குகளின் விவரம், குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தந்த வழக்கு விவரங்களையும் கேட்டறிந்து, காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு ஆவணங்களையும், ரெளடி பட்டியல் குறித்த விவரங்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது மாநகரக் காவல் ஆணையா் செந்தில்குமாா், சட்டம் -ஒழுங்கு துணை ஆணையா் சந்திரசேகரன், உதவி ஆணையா் மணிகண்டன் , சேலம் சிபிசிஐடி உதவி ஆணையா் கிருஷ்ணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கடந்த ஆண்டு சிறந்த காவல் நிலையமாக சேலம் நகரக் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT