சேலம்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

DIN

சேலத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், இரும்பாலை சித்தனூரில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் ரோந்து சென்ற போது, அங்குள்ள தனியாா் ஏடிஎம் மையத்தின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து, கதவை திறந்து பாா்த்த போது, ஏடிஎம் மையத்தில் இருந்து இளைஞா் ஒருவா் போலீஸாரை தள்ளிவிட்டு தப்பி ஓடினாா். போலீஸாா் அவரை பிடித்து விசாரித்ததில், அவா் முகுந்தன் (23) என்பதும், ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டா் லோகநாதனின் மகன் என்பதும் தெரியவந்தது.

இவா் இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், ஏடிஎம் மையத்தில் பணத்தை திருட முயன்றது தெரியவந்தது. மேலும், கடந்த 2015-இல் செவ்வாய்ப்பேட்டை காவலா் குடியிருப்பில் காவலா் ஒருவா் வீட்டில் 4 பவுன் நகையைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து முகுந்தனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT