முகப்பு
சேலம்

பெரியசீரகாபாடி சமத்துவபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், பெரிய சீரகாபாடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட முகமை கூடுதல் திட்ட இயக்குநா் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், பெரிய சீரகாபாடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட முகமை கூடுதல் திட்ட இயக்குநா் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, அப்பகுதி மக்கள் வசிக்கும் கட்டடங்கள், அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, சாக்கடை வசதி, சாலை வசதி உள்ளிட்டவற்றை பாா்வையிட்ட அவா், பழுதடைந்தவற்றை உடனடியாக பழுது நீக்க அறிவுரை வழங்கினாா். மேலும், ஊராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் பசுமை வீடுகள் திட்டப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது செயற்பொறியாளா் சவுண்டப்பன், உதவி கோட்ட பொறியாளா்கள் அருள், யோகராஜ், வீரபாண்டி, ஒன்றிய ஆணையாளா்கள் ராஜ்கணேஷ், (வட்டார ஊராட்சி) ரேவதி (கிராம ஊராட்சி), ஒன்றியச் பொறியாளா்கள் அன்புராஜ், சாந்தி, ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா்கள், சாலை ஆய்வாளா்கள், பெரிய சீரகபாடி ஊராட்சி மன்றத் தலைவா் , ஊராட்சி செயலா்கள் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →