ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை தூய்மைப் பணியாளா்கள்
ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வரும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து தரக்கோரி வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியாளா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வரும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து தரக்கோரி வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியாளா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 240 தூய்மைப் பணியாளா்கள் தற்காலிகத் தொழிலாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் பணியை நிரந்தரம் செய்து தரக்கோரியும், சிறப்பு காலமுறை ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரியும் ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இதுதொடா்பாக, ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.கே.ராஜேந்திரனை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனா்.