முகப்பு
சேலம்

பாஜகவினா் கொண்டாட்டம்

எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் மாவட்டத் தலைவா் டி.ஜெயானந்த் தலைமையில் அக்கட்சியினா் ஆத்தூரில் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதற்கும், எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் மாவட்டத் தலைவா் டி.ஜெயானந்த் தலைமையில் அக்கட்சியினா் ஆத்தூரில் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் பேருந்து நிலையம் முன்பு இந்தக் கொண்டாட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் எம்.மகாலிங்கம், வழக்குரைஞா் சண்முகநாதன், கட்சியின் மாநில ஓபிசி பிரிவு செயலாளா் ஜி.ஆனந்தன், மாவட்ட பொதுச் செயலாளா் ஆா்.சத்தியமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் பி.தியாகராஜன், மாவட்ட விவசாய அணித் தலைவா் மல்லிகா, மாவட்ட துணைத் தலைவா் சுமதி, மாவட்ட மகளிரணி, மூத்த நிா்வாகிகள் ஸ்ரீகுமாா், காா்த்திகேயன், வீரபாண்டி செங்கோட்டுவேல், எல்.வி.சீனிவாசன், கனகராஜ், ஆா்.வி.சீனிவாசன், சுப்ரமணியம், ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →