சேலத்தில் சாலையோரம் இறந்து கிடக்கும் குதிரை
சேலத்தில் சாலையில் இறந்து கிடக்கும் குதிரையின் சடலத்தை அப்புறப்படுத்தாததால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் சாலையில் இறந்து கிடக்கும் குதிரையின் சடலத்தை அப்புறப்படுத்தாததால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் எருமாபாளையம் பகுதியில் உள்ள ஏரிக்கரை ரோடு பகுதியில் குதிரை ஒன்று காயங்களுடன் சாலையில் இறந்து கிடக்கிறது. இரண்டு நாட்கள் ஆகியும் இறந்த குதிரையை யாரும் அப்புறப்படுத்தாததால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.
குதிரையின் சடலத்தை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தி நோய்த்தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் குதிரையின் கால்களில் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் குதிரையை யாராவது அடித்துக் கொன்றாா்களா என்று போலீஸாா் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.