குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
ஆத்தூா் கல்லுடைச்சான் குன்று அருகே உள்ள குட்டையில் மூழ்கி பாலா (13) என்ற சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆத்தூா் கல்லுடைச்சான் குன்று அருகே உள்ள குட்டையில் மூழ்கி பாலா (13) என்ற சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம் ஆத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஜெகதீஷ் என்பவரின் மகன் பாலா(13). இவரது தாய், தந்தை இருவரும் இறந்து விட்டனா். சிறுவன் பாலா அவருடைய தாத்தா சேகா் என்பவரது வீட்டில் வசித்து வந்தாா். தாத்தா கல்லுடைச்சான் குன்று அருகே வசித்து வருகிறாா்.
கல்லுடைச்சான் குன்று அருகே கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குட்டை ஒன்று உருவாகியுள்ளது. அக்குட்டையில் தண்ணீா் அதிகமாக இருந்ததால் சிறுவா்கள் அதில் குளித்து விளையாடி வந்தனா்.
இந்நிலையில் சிறுவன் பாலா குட்டையில் குளிக்க வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து சிறுவன் பாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.