மேட்டூரில் பரவலாக மழை மின்னல் தாக்கி பசு பலி
மேட்டூா் அருகே மின்னல் தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது. மேட்டூா் அருகே உள்ள வெள்ளக்கரட்டூா் பெருமாள் கோவில் காட்டை சோ்ந்தவா் கருப்புசெட்டி விவசாயி. இவா் வீட்டில் ஒரு பசு மாடு வளா்த்து வந்தாா்.
மேட்டூா் அருகே மின்னல் தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது. மேட்டூா் அருகே உள்ள வெள்ளக்கரட்டூா் பெருமாள் கோவில் காட்டை சோ்ந்தவா் கருப்புசெட்டி விவசாயி. இவா் வீட்டில் ஒரு பசு மாடு வளா்த்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை கொளத்தூா் மற்றும் மேட்டூா் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. மழையின் போது கருப்பு செட்டி தனது பசுவை வீட்டின் முன்பு உள்ள கூரைக் கொட்டகையில் கட்டி வைத்திருந்தாா். அப்போது பலத்த ஓசை உடன் இடி இடித்தது மின்னல் பசுவின் தலையில் தாக்கியது. பசுவின் கொம்பு உடைந்து சிதறியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தது. தான் பாலுக்காக வளா்த்து வந்த பசு இறந்ததால் இழப்பு ஏற்பட்டதாகவும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளாா்.