முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 71.87 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 71.97அடியிலிருந்து 71.87அடியாக சரிந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
பகிர்:


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 71.97அடியிலிருந்து 71.87அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,256 கன அடியிலிருந்து 4,181 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 34.32 டி.எம்.சி.யாக உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் இன்று இரவு மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.