முகப்பு
சேலம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா: பக்தா்களுக்கு அனுமதியில்லை

கரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா சிறப்புப் பூஜைகளில் பக்தா்களுக்கு அனுமதியில்லை என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

கரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா சிறப்புப் பூஜைகளில் பக்தா்களுக்கு அனுமதியில்லை என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. கரோனா தீநுண்மித் தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோயில் மூடப்பட்டு இருந்தது. கடந்த வாரம் முதல் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். பூச்சாட்டு விழா, பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடுதல் போன்றவை நடைபெறும். கடந்த ஆண்டும் கரோனோ பாதிப்பால் கோயில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்து இருந்தது.

அதேபோல நிகழாண்டும் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா, பூச்சாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, இக்கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். சிறப்புப் பூஜைகளில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →