பக்ரீத் பண்டிகை: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சிறப்புத் தொழுகை
சேலத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
சேலத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
சேலத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை காலை ஜாமிய மசூதியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் ஏராளமானோா் முகக் கவசம் அணிந்து கலந்துகொண்டனா்.
சேலத்தில் அஸ்தம்பட்டி, பள்ளப்பட்டி, கன்னங்குறிச்சி, முள்ளுவாடி கேட், சிங்கமெத்தை உள்ளிட்ட அனைத்து மசூதிகளிலும் காலையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஒரு சிலா் வீடுகளில் தொழுகை நடத்தினா்.
இதைத்தொடா்ந்து ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவி, இறைச்சியைத் தானமாக வழங்கினா்.