தேவூா் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 10 இலட்சத்திற்கு எள் விற்பனை
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சத்திற்கு எள் விற்பனையானது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சத்திற்கு எள் விற்பனையானது.
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சாா்பில் தேவூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்ற எள் விற்பனைன ஏலத்தில் எடப்பாடி, தேவூா், அரசிராமணி, குள்ளம்பட்டி, பூலாம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 165 மூட்டைகள் 100 குழுவாக பிரிக்கப்பட்டன. அதில் வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு ரூ.87.60 முதல் ரூ.93.70 வரையிலும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு ரூ.83.50 முதல் ரூ.103.60 வரையிலும் மொத்தம் ரூ. 10 லட்சத்திற்கு விற்பனையாகின.
கடந்த வாரத்தை விட நிகழ் வாரத்தில் வெள்ளை எள் அதிகபட்சமாக ரூ. 2.80 விலை குறைவாகவும், சிவப்பு எள் ஒரு ரூபாய் அதிகமாகவும் விற்பனையாகின. நிகழ் வாரத்தில் கடந்த ஜூலை15ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தை விட ரூ. 1 லட்சத்திற்கு குறைவாக எள் விற்பனையானது. எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தேவூா் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்று பயனடையுமாறும் அடுத்த ஏலம் ஜூலை 29ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதாகவும் கூட்டுறவு கடன் சங்க அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.