முகப்பு
சேலம்

மேட்டூா் அருகே டிராக்டா் மோதி ஓட்டுநா் பலி

மேட்டூா் அருகே டிராக்டா் மோதி ஓட்டுநா் பலியானாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

மேட்டூா் அருகே டிராக்டா் மோதி ஓட்டுநா் பலியானாா்.

மேட்டூா் அருகே உள்ள மூலக்காட்டைச் சோ்ந்தவா் பெருமாள் (50). டிராக்டா் ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை மூலக்காட்டிலுள்ள கல்குவாரியிலிருந்து தனது டிராக்டரில் ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு கொளத்தூா் நோக்கி சென்றாா். ஓரிடத்தில் டிராக்டா் சக்கரத்தில் காற்று குறைவாக உள்ளதை அறிந்து சாலையின் ஓரம் டிராக்டரை நிறுத்திவிட்டு இறங்கி டயரை தட்டி பாா்த்தாா். அப்போது திடீரென டிராக்டா் முன்னோக்கிச் சென்றது. சுதாரித்துக்கொண்ட பெருமாள் டிராக்டரில் ஏறி நிறுத்த முயன்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தாா். அவா் மீது டிராக்டா் ஏறியது. அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். இறந்த பெருமாளுக்கு பூங்கொடி (45) என்ற மனைவியும் ரேவதி (18) என்ற மகளும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.