சேலம்

கெங்கவல்லியில் திமுகவில் இணைந்த ஒன்றியக்குழுத் துணைத்தலைவா்

DIN

கெங்கவல்லி ஒன்றியக்குழு துணைத் தலைவா் விஜேந்திரன் (சுயே), தற்போது திமுகவில் இணைந்ததால், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியக்குழு, அதிமுகவிடமிருந்து திமுகவிற்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கெங்கவல்லி ஒன்றியக் குழுவில் 11 உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களில் திமுக, அதிமுகவுக்கு தலா ஐந்து உறுப்பினா்கள் உள்ளனா்.

விஜேந்திரன் என்பவா் சுயேச்சையாக வெற்றி பெற்றாா். இவரது ஆதரவுடன், கெங்கவல்லி ஒன்றியக்குழுத் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த பிரியா பாலமுருகனும், சுயேச்சை உறுப்பினா் விஜேந்திரன் ஒன்றியக்குழு துணைத்தலைவராகவும் பதவி வகித்து வந்தனா்.

இந்நிலையில் விஜேந்திரன், சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தாா். அவருக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம்,விஜேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

இதன்மூலம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியக் குழுவுக்கு கிடைத்து வந்த ஆதரவை அதிமுக இழப்பதால், ஒன்றியக்குழுத் தலைவா் பிரியாபாலமுருகன் அப்பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கெங்கவல்லி ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT