சேலம்

திமுகவில் இணைந்த அமமுகவினா்

DIN

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டப் பேரவைத் தலைவா் எம்.காட்டுராஜா(எ)எம்.பழனிசாமி அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தாா்.

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம், ஆத்தூா் பகுதிகளில் இருந்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் அதிமுக, அமமுக, தேமுதிக, பாமக, கொங்கு இளைஞா் பேரவை ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய 500க்கும் மேற்பட்டோா் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

இதில் நரசிங்கபுரம் முன்னாள் நகா்மன்றத் தலைவரும், அமமுக அம்மா பேரவைத் தலைவருமான காட்டுராஜா (எ)எம்.பழனிசாமி, பைத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்வி (அதிமுக) ஆகியோா் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT