மேட்டூரில் ரயில் என்ஜினில் தீ விபத்து
மேட்டூரில் ரயில் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலம்மேட்டூரில் ரயில் என்ஜினில் தீ விபத்து
மேட்டூரில் ரயில் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மேட்டூரில் ரயில் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் ஆயிரத்து 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இன்று காலை பகல் 12 மணி அளவில் 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது பிரிவு அனல் மின் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 30 நிலக்கரி நிரப்பப்பட்ட ரயில் பெட்டிகளை இழுத்துக் கொண்டு கரிகையாளும் பகுதிக்கு இழுவை ரயில் என்ஜின் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ரயில் என்ஜின் தீ பற்றி எரியத் தொடங்கியது. காற்று வேகமாக அடித்ததால் தீ மளமளவென பரவியது. தகவல் அறிந்த அனல் மின் நிலைய தீயணைப்புப் படையினர் இரண்டு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலக்கரி நிரப்பிய 30 ரயில் பெட்டிகளை எஞ்சினில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளது. தீயணைப்பு வீரர்களும் மற்ற பொறியாளர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ள்ளனர். தீ இன்னும் அணைக்கப்படவில்லை. இதனால் பல லட்ச ரூபாய் சேதம் ஏற்பட்டிருக்கும்.
தீயை முழுமையாக அனைத்து ஆய்வு செய்த பிறகே விபத்துக்கான காரணமும் சேதத்தின் மதிப்பும் தெரிய வரும். கடந்த மாதம் 18 -ம் தேதி நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதனை அடுத்து தற்போது சில நாட்களுக்குள் இந்த தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில் என்ஜின் இழுவை என்ஜினில் சில நாட்களாகவே ஆயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆயில் கசிவை சரிசெய்யாத காரணத்தாலேயே தீப்பற்றி இருக்கலாம் என்று அங்குள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.