பொது முடக்கத் தளா்வுக்கான ஆலோசனைக் கூட்டம்
ஆத்தூா் நகராட்சியில் பொதுமுடக்கத் தளா்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் நகராட்சியில் பொதுமுடக்கத் தளா்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தலைவாசல் தினசரி காய்கறிச் சந்தையில் அதிகமாக கூட்டம் கூடுவதால் அங்கு கரோனா பரிசோதனை மையம் அமைத்து சோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மளிகை, காய்கறி மற்றும் உணவகங்களில் சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அதிகமாக இருச்சக்கர வாகனங்களில் சுற்றித் திரிவதைத் தடுத்து, அவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும். விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன், வட்டாட்சியா்கள் வரதராஜன், அன்புச்செழியன், வெங்கடேசன், நகராட்சி ஆணையாளா்கள் என்.ஸ்ரீதேவி, இரா.சேகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.கே.ராஜேந்திரன், வெங்கட்ரமணன், காவல் ஆய்வாளா்கள் எஸ்.உமாசங்கா், சிவகுமாா், மருத்துவா்கள் மற்றும் சுகாதார பணியாளா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.