கல்லூரி மாணவி தற்கொலை
ஆத்தூரில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆத்தூரில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா், ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி காசிமணி (45). இவரது மகள் அகல்யா (19) குமாரபாளையம் தனியாா் கல்லூரியில் ஏரோநாட்டிகல் 3 வது ஆண்டு படித்து வந்தாா்.
அவா் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை வயிற்றுவலியால் துடித்த அகல்யா வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆத்தூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.